பாதாள சாக்கடை திட்டம் குறித்து ஆய்வு கூட்டம்


பாதாள சாக்கடை திட்டம்  குறித்து ஆய்வு கூட்டம்
x

நெல்லை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் குறித்து ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி

நெல்லை:

பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், நெல்லை மாநகராட்சி அம்ருத் திட்டம் பகுதி-2-ல் தச்சநல்லூர் மண்டல பகுதிக்குட்பட்ட பழைய வார்டு எண் 1 முதல் 7 வரை, வார்டு 38, 39 முதல் 55 வரை ஆகிய இடங்களில் பாதாளச் சாக்கடை திட்டத்தினை ரூ.291 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்றுவதற்கு ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. 77 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பாக திட்ட மேலாண்மை ஆலோசனை குழுவிடம் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனமும் கலந்து பேசி தீர்வு மேற்கொள்ளப்பட்டு பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

கூட்டத்தில் மாநகர பொறியாளர் அசோகன், செயற்பொறியாளர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story