கவுண்டன்ய மகாநதி ஆற்றில் அமைக்கப்பட்ட கடைகளை வெள்ளம் சூழ்ந்தது


கவுண்டன்ய மகாநதி ஆற்றில் அமைக்கப்பட்ட கடைகளை வெள்ளம் சூழ்ந்தது
x

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவையொட்டி கவுண்டன்ய மகாநதி ஆற்றில் அமைக்கப்பட்ட கடைகளை வெள்ளம் சூழ்ந்தது. தரைப்பாலத்தை துண்டித்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவையொட்டி கவுண்டன்ய மகாநதி ஆற்றில் அமைக்கப்பட்ட கடைகளை வெள்ளம் சூழ்ந்தது. தரைப்பாலத்தை துண்டித்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

திருவிழா கடைகள்

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கவுண்டனயாமகாநதி ஆற்றில் தரைப்பாலத்தை ஒட்டியபடி கடைகள் மற்றும் ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சுற்றுப்புறக் கொட்டாறுகளின் வெள்ளம் சேர்ந்து கவுண்டன்யமகாநதி ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

கவுண்டன்ய மகாநதி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த திருவிழாக்கடைகளையும், ராட்டினம் அமைக்கப்பட்ட பகுதியையும் வெள்ளம் சூழ்ந்தது. தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கெங்கையம்மன் கோவில் தரை பாலத்தைத் தாண்டி வெள்ளம் வரும் நிலை ஏற்பட்டது. மேலும் வெள்ளம் அதிகரித்தால் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.

பாலத்தை துண்டித்து

இதனால் தற்காலிக பாலத்தின் ஒரு பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் கொண்டு பாலத்தை துண்டித்து விட்டனர். இதனை தொடர்ந்து வெள்ள நீர் வடியத்தொடங்கியது. இதன் காரணமாக கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

தரைப்பாலத்தில் வெள்ளம் செல்ல வெட்டப்பட்ட பகுதியில் போர்க்கால அடிப்படையில் ராட்சத பைப்புகள் புதைத்து போக்குவரத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளை குடியாத்தம் தாசில்தார் லலிதா, நகர்மன்றத் தலைவர் சவுந்தரராசன், நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, பொறியாளர் சிசில்தாமஸ், நகர்மன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

போக்குவரத்து நெரிசல்

தொடர்ந்து பணிகள் நடைபெற்றதன் எதிரொலியாக மாலையில் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது. முன்னதாக போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் காமராஜர் பாலத்தில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது போலீசார் சிரமப்பட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின்பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆற்றில் அமைக்கப்பட்ட கடைகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Related Tags :
Next Story