புகையில்லா போகி விழிப்புணர்வு பிரசாரம்


புகையில்லா போகி விழிப்புணர்வு பிரசாரம்
x

பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் சார்பில், புகையில்லா போகி விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

தேனி

பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் சார்பில், புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதனையொட்டி பெரியகுளம் காய்கறி மார்க்கெட், கடை வீதி மற்றும் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் புனிதன், நகர்நல அலுவலர் அரவிந்த கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் அசன்முகமது, சேகர், நகராட்சி கவுன்சிலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் விழிப்புணர்வு கோஷங்களையும் எழுப்பினர்.

போகி பண்டிகையன்று பழைய டயர்கள், பாய், மெத்தை, தலையணைகள், துணிகள் மற்றும் தேவையில்லாத பொருட்களை பொது இடங்களில் கொட்டுவதும், எரிப்பதும் நகராட்சி சார்பாக தடை செய்யப்பட்டுள்ளது. எனவே குப்பைகளை தங்களது வீடு தேடி வரும் நகராட்சி பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும் என்று ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story