கோவில்களில் சிறப்பு வழிபாடு


கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. கடைவீதி மற்றும் எடத்தெரு மாரியம்மன் கோவில்கள், அம்சாரேணுகாதேவி அம்மன் கோவில், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், வடக்கு தெப்பக்குளம் அருகே உள்ள அங்காளம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. துறைமங்கலத்தில் புதுக்காலனியில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி விரதபூஜையை முன்னிட்டு, உலக நன்மைக்காக சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, அம்பாளுக்கு அபிஷேகங்களும், ரூபாய் நோட்டு அலங்காரமும், மகாதீபாராதனையும் நடந்தது. சிறுவாச்சூரில் மதுரகாளிஅம்மன் கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, அம்பாளுக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. இரவில் தங்கரதம் புறப்பாடு நடந்தது. எளம்பலூரில் காகன்னை ஈஸ்வரர் கோவிலில் வரலட்சுமி பூஜையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. மாலையில் உலக நன்மைக்காக 210 சித்தர்கள் யாகம் நடத்தப்பட்டு, சுமங்கலி பெண்களுக்கு மங்கலப்பொருட்கள் தானமாக வழங்கப்பட்டன.


Next Story