மயிலாடுதுறையில், புறவழிச்சாலை பணியை தொடங்க வேண்டும்
போக்குவரத்து நெரிசலை குறைக்க மயிலாடுதுறையில், புறவழிச்சாலை பணியை தொடங்க வேண்டும் என்று மூத்த குடிமக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை;
மயிலாடுதுறையில் மூத்தகுடிமக்கள் அவை கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சையத்உசேன், துணை செயலர் ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் திருவள்ளுவன் வரவேற்றுப் பேசினார். செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், மதிவாணன், விருத்தாஜலம் உட்பட பலர் பேசினர்.கூட்டத்தில், மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைபெற வரும் மூத்தகுடிமக்களுக்கு தனிவார்டு ஒதுக்கீடு செய்யவேண்டும். மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புறவழிச்சாலை திட்டத்துக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து பணியை உடனே தொடங்க வேண்டும். மயிலாடுதுறையில் அரசு மருத்துவக்கல்லூரி விரைவாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் துணைச் செயலாளர் முருகையன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story