புறவழிச் சாலை பணிகளை தொடங்க வேண்டும்


புறவழிச் சாலை பணிகளை தொடங்க வேண்டும்
x

திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மன்னார்குடி சாலையை இணைக்கும் புறவழிச்சாலை பணிகளை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மன்னார்குடி சாலையை இணைக்கும் புறவழிச்சாலை பணிகளை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

போக்குவரத்து நெரிசல்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூருக்கு திருத்துறைப்பூண்டி நகர் வழியாக செல்ல வேண்டும். மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி, கரூர் ஈரோடு, சேலம், நாமக்கல், பெங்களூர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு திருத்துறைப்பூண்டி நகரின் வழியாக செல்ல வேண்டும். இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி ெரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

புறவழிச்சாலை

எனவே திருத்துறைப்பூண்டி நகருக்குள் வராமல் நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து திருவாரூர் செல்லும் புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து பணிகள் முடிக்கப்பட்டுபோக்குவரத்து நடைபெற்று வருகிறது. பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் திருத்துறைப்பூண்டி நகருக்குள் வராமல் புறவழிச் சாலை வழியாக திருவாரூர் செல்ல இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மன்னார்குடி சாலை

இதைப்போல திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி செல்லும் வாகனங்கள் நகரத்தின் உள்ளே வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் திருவாரூர் சாலையில் இருந்து மன்னார்குடி சாலையை இணைக்கும் புறவழிச் சாலை பணிகளை உடனே தொடங்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், தொண்டி மீமிசல், ராமநாதபுரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் திருத்துறைப்பூண்டி நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்ல இந்த சாலை அவசியமாக உள்ளது.எனவே திருவாரூர் சாலையில் இருந்து மன்னார்குடி சாலையை இணைக்கும் புறவழிச்சாலை பணிகளை தொடங்கி போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூடப்படும் ரெயில்வே கேட்

இது சமூக ஆர்வலர் ராஜேந்திரன் கூறியதாவது:-

திருத்துறைப்பூண்டி நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் அடிக்கடி ெரயில்வே கேட் மூடப்படுவதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க திருவாரூர் சாலையில் இருந்து மன்னார்குடி சாலையை இணைக்கும் புறவழிச்சாலை பணிகளை தொடங்க வேண்டும். இதற்காக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். எனவே சாலை பணிகளை விரைவில் தொடங்கி முடித்தால் போக்குவரத்து நெரிசல் கண்டிப்பாக இருக்காது. இவ்வாறு அவா் கூறினாா்.


Next Story