நெல்லையில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி


நெல்லையில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி
x

சேரன்மாதேவியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் நூற்றுக்கணக்கான வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம், சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபம் ஒன்றில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது. இதில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தனி போட்டி மற்றும் குழு போட்டியில் பங்கேற்றனர்.

இதில் சிலம்பம், வாள் விளையாட்டு, சுருள் விளையாட்டு, வாள் கேடயம், வேல்கம்பு உள்ளிட்டப் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு மாணவர்கவள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

போட்டிக்கான ஏற்பாடுகளை சேரன்மாதேவி உலக விடிவெள்ளி சிலம்பாட்ட கழகத்தினர் செய்திருந்தனர்.

1 More update

Next Story