வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கருணாநிதி சிலை


வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கருணாநிதி சிலை
x

நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கருணாநிதி சிலை வைக்க ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராணிப்பேட்டை

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட 47 ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் நெமிலி ஒன்றியத்தை பிளாஸ்டிக் இல்லா ஒன்றியமாகவும், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் கருணாநிதி சிலை அமைத்திடவும், பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு, கிராம ஊராட்சிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளை அப்புறப்படுத்தி புதிய தொட்டிகளை அமைத்திடவும், நெமிலி தாலுகாவில் கோர்ட்டு அமைத்திடவும், திருமால்பூர் கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது, தேவையான இடங்களில் அங்கன்வாடி மையம், பகுதிநேர ரேஷன் கடை, கால்நடை மருத்துவமனை அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமுத்து, சிவராமன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story