எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி: மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை விக்கிரவாண்டியில் சோகம்


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி:  மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை  விக்கிரவாண்டியில் சோகம்
x

விக்கிரவாண்டியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விழுப்புரம்


விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், விவசாயி. இவரது மகன் ராஜ்பிரியன் (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார்.

நேற்று முன்தினம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 3 பாடத்தில் தோல்வியடைந்தார். இதனால் ராஜ்பிரியன் மனவேதனையில் இருந்தார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் பிணமாக தொங்கிய அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

போலீஸ் விசாரணை

இதற்கிடையே தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நேற்று முன்தினம் ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று குறைந்த மதிப்பெண் பெற்றதால் ஒரு மாணவி, ஒரு மாணவரும், , பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்ததால் ஒரு மாணவி, மாணவர் என மொத்தம் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என்பதுகுறிப்பிடதக்கதாகும்.


Next Story