வாழப்பாடி மகளிர் போலீஸ் நிலையத்தில் வாக்குவாதம்:சப்-இன்ஸ்பெக்டர், காவலர் இடமாற்றம்
வாழப்பாடி மகளிர் போலீஸ் நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சேலம்
வாழப்பாடி:
வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் மல்லிகா (வயது 49). இதே போலீஸ் நிலையத்தில் காவலராக சசிகலா (38) என்பவரும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் காவலர் சசிகலா மீது சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகா பல்வேறு புகார்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே போலீஸ் நிலையத்தில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வாட்ஸ்-அப் உள்பட சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இந்த நிலையில் நேற்று மாலை 2 பேரையும் இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவிட்டார். இதன்படி சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகா ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், காவலர் சசிகலா சங்ககிரி போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story