ஊத்தங்கரை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை


ஊத்தங்கரை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T00:16:05+05:30)
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு அருகே உள்ள எளச்சூரை சேர்ந்தவர் பூங்காவனம். இவரது மனைவி சுகன்யா (வயது 25). இவருக்கு வயிற்று வலி இருந்தது. இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த சுகன்யா கடந்த 20-ந் தேதி வீட்டில் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story