கோடை கால கலை பயிற்சி வகுப்பு: 95 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள்


கோடை கால கலை பயிற்சி வகுப்பு: 95 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள்
x

கோடை கால கலை பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 95 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18-ந் தேதியன்று சர்வதேச அருங்காட்சியக தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 4 நாட்கள் கோடைகால கலைப்பயிற்சி வகுப்பு நடந்தது. கடந்த 16-ந் தேதி ஓவியப்பயிற்சியும், 17-ந் தேதி களிமண் பொம்மை செய்யும் பயிற்சியும், 18-ந் தேதி அடிப்படை யோகாசனம் செய்யும் பயிற்சியும் நடந்தது.

தொடர்ந்து அரியலூர் அருங்காட்சியக மாதிரி அமைப்பு கலைஞர் அசோகன், சாக்பீசில் சிற்பங்கள் செய்யும் பயிற்சியை அளித்தார். இதில் 95 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முடிவில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவர் நாராயணமூர்த்தி மற்றும் ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக பணியாளர்கள் செல்வம் மற்றும் பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story