தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்
x

தென்காசியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி

தென்காசி:

தென்காசி கொடிமரம் திடலில் நேற்று மாலை த.மு.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முகமது நபி மீது அவதூறாக ஒரு தொலைக்காட்சியில் பேசிய பா.ஜ.க.வின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுல் சர்மா, இதேபோன்று தன்னுடைய டிவிட்டர் பதிவில் நபிகளாரை குறித்து அவதூறு பரப்புரை செய்த பா.ஜ.க. முன்னாள் டெல்லி ஊடக பிரிவைச் சேர்ந்த நவீன் ஜின்டால் ஆகியோர் மீது பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகம்மது யாகூப் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முகம்மது பாசித், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பஷிர் ஒலி, பொருளாளர் விசுவை அப்துல் காதர், துணைத் தலைவர் அப்துல் ரகுமான், மாநில செயற்குழு உறுப்பினர் இஸ்மத் மீரான், த.மு.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் அகமது ஷா, தென்காசி நகர செயலாளர் செய்யது அலி, மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் கரீம், பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் மைதீன் சேட் கான், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் விக்ரமன், நிர்வாகி வர்கீஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story