தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு 27-ந் தேதி நடக்கிறது


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு 27-ந் தேதி நடக்கிறது
x

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு 27-ந்தேதி நடக்கிறது. சீருடை பணியாளர்களுக்கான புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 634 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

புதுக்கோட்டை

சீருடை பணியாளர் தேர்வு

தமிழகம் முழுவதும் 3,552 இரண்டாம்நிலை போலீஸ், சிறைகாவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான சீருடை பணியாளர் களுக்கா எழுத்துத்தேர்வு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 7,634 விண்ணப்பதாரர்களில் 5,466 ஆண்களும், 2,168 பெண்களும் எழுத்து தேர்விற்கான அழைப்புக் கடிதங்கள் இணையதளம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் எழுத்து தேர்வினை எழுதுகின்றனர்.

5 இடங்களில்...

புதுக்கோட்டை லேணாவிளக்கு மவுண்ட்சீேயான் பொறியியல் கல்லூரி, லேணாவிளக்கு மவுண்ட்சீேயான் சி.பி.எஸ்.இ. பள்ளி, அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரி, மாலையீடு மவுண்ட்சீேயான் மெட்ரிக் பள்ளி, கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்வி நிறுவனம் ஆகிய 5 இடங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.

எழுத்து தேர்விற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை நகல், நீல நிற அல்லது கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா மற்றும் எழுத்துக்கள் எதுவும் இல்லாத தேர்வு எழுதும் அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

சிறப்பு பஸ் வசதி

செல்போன், ஸ்மாட் வாச், புளுடூத் ஹட் போன், பென்டிரைவ், கால்குலேட்டர், பென்சில், ரப்பர் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை தேர்விற்கு வரும் போதே கொண்டு வரக்கூடாது. விண்ணப்பதாரர்கள் தேர்வு நாளான 27-ந் தேதி காலை 8 மணி முதல் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வு எழுதவரும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் முககவசம் கட்டாயமாக அணிந்து வர வேண்டும்.

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ் அன்று காலை 7 மணி முதல் இயக்கப்படும். ஹால் டிக்ெகட் இல்லாதவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஹால் டிக்ெகட் தொடர்பாக சந்தேகங்களை மாவட்ட போலீஸ் அலுவலகம்- இளஞ்செழியன், உதவியாளர் - 9159077855, மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம்- 94981-00730 ஆகிய எங்களை தொடர்பு கொண்டு பேசலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story