மானாமதுரை சட்டமன்ற அலுவலகத்தில் தமிழரசி எம்.எல்.ஏ. தேசிய கொடி ஏற்றினார்


மானாமதுரை சட்டமன்ற அலுவலகத்தில் தமிழரசி எம்.எல்.ஏ. தேசிய கொடி ஏற்றினார்
x

குடியரசு தின விழாவையொட்டி மானாமதுரை சட்டமன்ற அலுவலகத்தில் தமிழரசி எம்.எல்.ஏ. தேசிய கொடி ஏற்றினார்.

சிவகங்கை

மானாமதுரை,

மானாமதுரை சட்டமன்ற அலுவலகத்தில் குடியரசு தின விழா நடந்தது. விழாவில் தமிழரசி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.ஆர்.பி. முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தேசிய கொடியேற்றினார். இதில் துணை தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் சக்திவேல், நகராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மானாமதுரை யூனியன் அலுவலகத்தில் யூனியன் தலைவர் லதா அண்ணாதுரை தேசிய கொடியேற்றினார். இதில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ரஜினிதேவி, சங்கர பரமேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர்கள், யூனியன் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சின்ன கண்ணனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அங்குசாமி கொடியேற்றினார். இதில் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழமேல்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தர்மா ராமு கொடியேற்றினார். பின்னர் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.


Next Story