டாஸ்மாக் ஊழியரை மிரட்டியவர் கைது
வீரவநல்லூரில் டாஸ்மாக் ஊழியரை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள ராஜகுத்தாலபேரி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 49). இவர் கிளாக்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இவர்பணியில் இருந்த போது கிளாக்குளம் மாதா கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து என்ற (39) என்பவர் மதுக்கடைக்கு வந்தார். அவர் மது வாங்கி விட்டு மாரியப்பனிடம் தகராறு செய்துள்ளார். அதற்கு மாரியப்பன் வீட்டுக்கு செல்லுமாறு கூறியதற்கு அங்கிருந்து சென்ற இசக்கிமுத்து மீண்டும் திரும்பி வந்து மாரியப்பனை அவதூறாக பேசி அரிவாளால் வெட்ட முயற்சி செய்துள்ளார். பின்னர் கொலைமிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து மாரியப்பன் வீரவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபற்றி வீரவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து இசக்கிமுத்துவை நேற்று கைது செய்தார்.