செவிலியரை பணிசெய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது


செவிலியரை பணிசெய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது
x

கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியரை பணிசெய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் ராதிகா (வயது 35). இவர் பணியில் இருந்தபோது மருத்துவமனைக்கு சென்ற கறம்பக்குடி சேவுகன் தெருவை சேர்ந்த ரங்கசாமி மகன் அருண்குமார் (26) என்பவர் விரைவாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி செவிலியர் ராதிகா மற்றும் மருத்துவ உதவியாளரை தகாத வார்த்தைகளால் பேசி பணி செய்ய விடாமல் தடுத்து உள்ளார். இதுகுறித்து ராதிகா அளித்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story