வாலிபர் போக்சோவில் கைது
மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பிளஸ்-2 படிக்கும் 17 வயது சிறுமி கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னா் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் அதில் லந்தக்கோட்டை அருகே உள்ள சாலம்பட்டியை சேர்ந்த திவின்குமார் (வயது 21) என்பவர் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து தாராபுரத்தில் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.
மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.இதையடுத்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் மீட்டு வடமதுரைக்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் போலீசார் திவின்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.