'அக்னிபத்' விவகாரம்; திருச்சியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு


அக்னிபத் விவகாரம்; திருச்சியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
x

‘அக்னிபத்’ விவகாரம் தொடர்பாக நடந்து வரும் போராட்டத்தையொட்டி திருச்சியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி

திருச்சி மாநகர் முழுவதும் நேற்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் திருச்சி ரெயில்வே ஜங்ஷன், மத்திய பஸ் நிலையம், ராணுவ ஆள் சேர்ப்பு மையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் காலை முதல் இரவு வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் அஜய் தங்கம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையம் வரை கொடி அணிவகுப்பு நடத்தினர். இதுகுறித்து உதவி கமிஷனர் அஜய் தங்கம் கூறுகையில், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் 'அக்னிபத்' திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து போராட்டத்தால் திருச்சியில் பொதுமக்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் இன்று(நேற்று) காலை முதல் போலீசார் மாநகர் முழுவதும் முக்கிய பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். யாரேனும் போராட்டத்தில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று(நேற்று) காலை வழக்கத்தை விட பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபடுவார்கள், என்றார்.


Next Story