உடுமலை பழைய பஸ்நிலையம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாதாளசாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
உடுமலை பழைய பஸ்நிலையம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாதாளசாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
உடுமலை,
உடுமலை பழைய பஸ்நிலையம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாதாளசாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பாதாள சாக்கடை
உடுமலை நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்திற்காக சாலைகளில் குழிதோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு ஆங்காங்கு இறங்குகுழி தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. வீடுகள் மற்றும் வணிகநிறுவனங்களில் இருந்து கழிவு நீர் இந்த தொட்டிகளுக்கு வந்துசேரும் வகையில் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிகள் பகுதிக்கு வரும் கழிவு நீர் பிரதான குழாய்கள் வழியாக ஏரிப்பாளையதை அடுத்து பெதப்பம்பட்டி சாலையில் உள்ள நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று சேர்கிறது.
இந்த திட்டத்தில் சாலைகளில் செல்லும் வாகனங்கள், ஆங்காங்கே உள்ள இறங்குகுழி தொட்டிகளின் மூடிகள் மீது ஏறி இறங்கி செல்வதால் அந்த மூடிகள் பழுதடைந்து விடுகிறது.இந்த நிலையில் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது கழிவுநீர், பழுதடைந்துள்ள மூடிகளின் விழிம்புகள் வழியாகவெளியேறுகிறது. அவ்வாறு கழிவுநீர் வெளியேறும் பகுதிகளுக்கு நகராட்சி சுகாதாரப்பிரிவு பணியாளர்கள் சென்று அடைப்பை நீக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.மூடிகள் பழுதடைந்து உடைந்து விடும்பகுதிகளில் சீரமைப்பு பணிகள்மேற்கொள்ளப்படுகின்றன.
சாலையில் ஓடிய கழிவுநீர்
இந்த நிலையில் உடுமலை பழைய பஸ்நிலையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆழ்நுழை இறங்கு குழி தொட்டியின் மூடி வழியாக நேற்றுமுன்தினம் இரவு முதல் கழிவு நீர் வெளியேறியது.இந்த சாலைபகுதியில் பாதாளசாக்கடை திட்டத்தில் பெரிய அளவிலான பிரதான குழாய் செல்கிறது.இந்த குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில், இறங்கு குழி தொட்டியின் மூடி வழியாக வெளியேறிய கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.அங்குள்ள கடைகளுக்கு முன்பும் கழிவுநீர் ஓடியது.அந்தபகுதியில் உள்ள பள்ளமான இடங்களில் கழிவு நீர்தேங்கிநின்றது.நேற்று
காலையிலும் இந்த நிலை நீடித்தது.அதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது.
அதனால் நடந்து சென்ற பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், கடைகளுக்கு பொருட்களை வாங்குவதற்கு வந்த பொதுமக்கள் ஆகியோர் கடும்அவதிக்குள்ளாகினர்.
இதைத்தொடர்ந்து நகராட்சி சுகாதார பிரிவு பணியாளர்கள் அங்குவந்துபாதாளசாக்கடை
திட்டக் குழாயில் இருந்த அடைப்பைநீக்கினர்.இதைத்தொடர்ந்து இறங்குகுழி தொட்டியின் மூடி வழியாக கழிவு நீர் வெளியேறிவந்தது நின்றுபோனது.இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.