திண்டுக்கல்லில் மயங்கி விழுந்து சிறுமி சாவு


திண்டுக்கல்லில் மயங்கி விழுந்து சிறுமி சாவு
x

திண்டுக்கல்லில் மயங்கி விழுந்த சிறுமி பரிதாபமாக இறந்துபோனார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்தவர் பீட்டர். அவருடைய மகள் ஜோன் ரஷ்சிதா (வயது 6). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த சில நாட்களாக ஜோன் ரஷ்சிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அதேபகுதியை சேர்ந்த உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பீட்டர் தனது குடும்பத்தினருடன் நேற்று சென்றார்.

இதையடுத்து உறவினர் வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த ஜோன் ரஷ்சிதா திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்த பெற்றோர், பதறியடித்தபடி ஓடி வந்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story