மது பாட்டில்கள் கடத்தியவர் கைது


மது பாட்டில்கள் கடத்தியவர் கைது
x

மது பாட்டில்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

தா.பழூர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தனக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சோழமாதேவி கோடாலி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது சோழமாதேவி ராஜாங்கம் மகன் அன்பழகன்(வயது 54) என்பவர் தனது மொபட்டில் கோடாலியிலிருந்து சோழமாதேவி நோக்கி சென்றுள்ளார். அவரை தடுத்து சோதனையிட்டபோது அவரது மொபட்டில் 30 மது பாட்டில்களை விற்பனைக்காக கடத்தி சென்றது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்களை அளவுக்கு அதிகமாக எடுத்துச் சென்றதாக அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.


Next Story