இரும்பு கம்பி திருடியவர் கைது
திட்டச்சேரி அருகே இரும்பு கம்பி திருடியவர் கைது செய்யப்பட்டார்
திட்டச்சேரி:
நாகை மாவட்டம், திட்டச்சேரி போலீஸ் சரகம் குத்தாலம் ஓ.என்.ஜி.சி.யில் இருந்த 2 இரும்பு கம்பிகளை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வேகமாக சென்றனர். அவர்களை ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் விரட்டிச் சென்றனர். வாஞ்சூர் பழைய இரும்பு கடையில் அதனை விற்க முயன்றபோது அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு இருவரும் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து திட்டச்சேரி போலீசாருக்கு ஓ.என்.ஜி.சி. தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு தப்பி ஓடிய கீழ்வேளூர் மஞ்சவாடி காலனி தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் இங்கர்சால் (வயது 27) என்பவரை கைது செய்தனர். தப்பிச்சென்ற மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.