முதியவரை தாக்கிய தாய், மகன்களுக்கு வலைவீச்சு


முதியவரை தாக்கிய தாய், மகன்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Sept 2023 12:15 AM IST (Updated: 16 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடம் அருகே முதியவரை தாக்கிய தாய், மகன்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள இடைச்சிவிளை குமரன்விளை தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 73). இவருக்கும், இடைச்சிவிளை அழகியவிளையை சேர்ந்த ஆறுமுககண் மனைவி பிரம்மசக்தி என்பவருககும் நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு திருச்செந்தூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 12-ந் தேதி முருகேசன் திசையன்விளைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அழகிய விளை அரசு பள்ளி அருகில் வந்தபோது பிரம்மசகதி, மகன்கள் ஆதிலிங்கம் (32), மாயசந்திரன் (27) ஆகியோர் அவரை வழி மறித்து அவதூறாக பேசி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதில் ஏற்பட்ட வாய்த்தகராறில் கிழே கிடந்த கற்களை எடுத்து அவரை 3 பேரும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த முருகேசன், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன் வழக்குப்பதிவு செய்து தாய், 2 மகன்களை தேடிவருகிறார்.


Next Story