கூரை வீட்டுக்கு தீ வைத்தவர் கைது
நாகூரில் கூரை வீட்டுக்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டார்
நாகப்பட்டினம்
நாகூர்:
நாகூர் பெருமாள்குளம் மேல்கரை புளியந்கோப்பு பகுதியில் வசித்து வருபவர் சங்கர் (வயது 52). இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் கூரை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.
இதில் தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என ரூ.6 லட்சம் வரை தீயில் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சோ்ந்த சந்திரசேகர் (48) என்பவர், சங்கர் வீட்டுக்கு தீ வைத்தது தெரியவந்தது. அதன்பேரில் சந்திரசேகரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story