மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை தாசில்தார் பார்வையிட்டார்.


மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை தாசில்தார் பார்வையிட்டார்.
x

கலவை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை தாசில்தார் பார்வையிட்டார்.

ராணிப்பேட்டை

கலவை தாலுகாவில் பெய்த மழையால் கலவைபகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவுப்படி, கலவை தாலுகாவில் உள்ள சென்ன சமுத்திரம் மாந்தாங்கல், மேட்டூர் போன்ற பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கலவை தாசில்தார் மதிவாணன் பார்வையிட்டார். மேலும் ஏரியின் அருகே உள்ள நீர் பிடிப்பு பகுதியில் உள்ள நிலங்களில் நெற்பயிர்களை அப்புறப்படுத்தவும் உத்தரவவிட்டார்.

வருவாய் ஆய்வாளர் வீரராகவன், கிராம அதிகாரி விஜி, கிராம உதவியாளர் குப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story