வைகை அணையின் நீர்மட்டம் 63.68 அடியாக சரிவு


வைகை அணையின் நீர்மட்டம் 63.68 அடியாக சரிவு
x

வைகை அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1,072 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையில், நீர்மட்டம் கடந்த ஓராண்டாக 60 அடிக்கு மேல் நீடித்து வந்தது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தண்ணீர் திறப்பு 1500 மற்றும் 1000 கன அடியாக குறைக்கப்பட்டது.

தற்போது மூல வைகை ஆற்றுப்பகுதியில் மழை இல்லாததால் வைகை அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லை. மேலும் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1,072 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 68 கன அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 63.68 அடியாக சரிந்துள்ளது.


Next Story