பெருந்துறை அருகே மருந்துக்கடையில் பணம் திருட்டு


பெருந்துறை அருகே மருந்துக்கடையில் பணம் திருட்டு
x

பெருந்துறை அருகே மருந்துக்கடையில் பணம் திருட்டு

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை அருகே உள்ள சிலேட்டர் நகரில் கிரிஜா என்பவர் மருந்துக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு கிரிஜா வீட்டுக்கு வந்துவிட்டார். நேற்று காலை மருந்து கடையை திறப்பதற்காக சென்றார். அப்போது கடையின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் பதறி அடித்து உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் கம்ப்யூட்டரின் மானிட்டர் ஆகியவை மாயமாகியிருந்தது தெரிந்தது. யாரோ திருடிச்சென்றுவிட்டார்கள். இதுகுறித்து கிரிஜா பெருந்துறை போலீசில் புகார் அளித்தார்கள்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மருந்துக்கடையில் கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story