தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு
ஊத்தங்கரையில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.
கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை
ஊத்தங்கரையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 60). இவர் போச்சம்பள்ளியில் உள்ள எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 1,500 அமெரிக்கன் டாலர் (இந்திய மதிப்பு ரூ.1 லட்சத்து 16 ஆயிரம்), ரூ.3 ஆயிரம், ஒரு பவுன் தங்க நகை ஆகியவை திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து ரமேஷ் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story