வயல்களில் மோட்டார்கள், மின்வயர்கள் திருட்டு


வயல்களில் மோட்டார்கள், மின்வயர்கள் திருட்டு
x

வயல்களில் மோட்டார்கள், மின்வயர்கள் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டார பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாகும். மழைநீர் மற்றும் மின் மோட்டார்களை கொண்டு இந்த பகுதியில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் குறிப்பாக கூவான கண்மாய் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் அடிக்கடி மின் மோட்டார் வயர்கள், மோட்டார்கள் திருட்டுபோய் வந்தன. இதுபோன்ற சமூக விரோத செயலில் ஈடுபடு பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருடி விற்கப்படும் பொருட்களை பழைய இரும்பு கடைகள் வாங்குவதாக கூறப்படுகிறது. குற்றச் செயலில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு துணைபோகும் வியாபாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story