சேலத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு


சேலத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு
x

சேலத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு போனது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேலம்

பணம் திருட்டு

சேலம் அழகாபுரம் நகரமலை அடிவாரம் திரிவேணி லேண்ட் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் ஜெயராஜ் (வயது 68). தனியார் கிரானைட் கம்பெனியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், கடந்த 12-ந் தேதி கோவையில் உள்ள உறவினர் வீட்டின் திருமணத்திற்காக குடும்பத்துடன் சென்றிருந்தார்.

அதன்பிறகு 16-ந் தேதி திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. பணம் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்

இதேபோல், அழகாபுரம் கிரீன்லேண்ட் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (31). கடந்த வாரம் சொந்த ஊரான திருப்பூர் அருகே வெள்ளக்கோவிலுக்கு சென்றார். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்றனர்.

மேலும், அதேபகுதியில் வசித்து வரும் சீனிவாசராகவன் என்பவரின் வீட்டிலும் மர்ம நபர்கள் புகுந்து ரூ.28,500-ஐ திருடியுள்ளனர். அவர் தனது குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, அதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீட்டிற்குள் புகுந்து திருடியுள்ளனர்.

இந்த 3 திருட்டு சம்பவங்கள் தொடர்பாக அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்து 3 வீடுகளில் பணம், நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story