போலி ஆவணங்கள் மூலம்பயிர்க்காப்பீடு செய்த வாலிபர்:போலீசார் விசாரணை


போலி ஆவணங்கள் மூலம்பயிர்க்காப்பீடு செய்த வாலிபர்:போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே போலி ஆவணங்கள் மூலம் பயிர்க்காப்பீடு செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து கிராமத்தை சேர்ந்த சின்னசுப்பையா மகன் மணிகண்டன் (வயது 35). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை, தனக்கு சொந்தமானவை போன்று போலி ஆவணங்கள் தயார் செய்துள்ளார். இந்த ஆவணங்கள் மூலம் பயிர் காப்பீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கயத்தாறு வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குனர் ஆ.சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதிலீப் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story