தமிழகத்தில் மேலும் 775- பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 775 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 775 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக சீராக குறைந்து வருகிறது. அந்தவகையில் இன்றும் கொரோனா பாதிப்பு நேற்றை விட சரிந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-
தமிழகத்தில் இன்று புதிதாக 25 ஆயிரத்து 592 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 775 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை.
மேலும் இன்றைய நிலவரப்படி 7 ஆயிரத்து 680 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் 394 பேர் ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1,067 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.