தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை


தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை
x

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் சிறுமலை, ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் இருந்து காய்கறிகள் விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நாள்தோறும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.90 வரையில் விற்பனை ஆன தக்காளி தற்போது விலை குறைந்து ரூ.60 முதல் ரூ.70 வரையில் விற்பனை ஆனது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையினால் தக்காளி செடிகள் அழுகி போனதால் வரத்து குறைந்தது. அதனால் விலை உயர்ந்தது. இந்நிலையில் ஓசூர் மற்றும் ஆந்திராவில் இருந்து தக்காளி தற்போது இறக்குமதி செய்யப்படுகிறது. சுமார் 5 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. அதனால் தக்காளி விலை சற்று குறைந்துள்ளது.

மேலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படும் தக்காளி வரத்து தொடங்கும்போது இதன் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என்றார். மார்க்கெட்டில் (விலை கிலோவில்) கத்தரிக்காய் ரூ.20 முதல் ரூ.35, வெண்டைக்காய் ரூ.20, முருங்கைக்காய் ரூ.50 முதல் ரூ.60, கேரட் ரூ.25 முதல் ரூ.35, முட்டைக்கோஸ், பீட்ரூட் தலா ரூ.50, அவரைக்காய் ரூ.40, புடலங்காய் ரூ.15-க்கும் விற்பனை ஆனது.


Next Story