குற்றாலம் அருவிகளில் இரவிலும் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்


குற்றாலம் அருவிகளில் இரவிலும் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
x

குற்றாலம் அருவிகளில் இரவிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி

தென்காசி:

குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த சாரல் மழையினால் இங்குள்ள அருவிகளில் தண்ணீர் விழுந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது. நேற்று காலையில் இருந்து சாரல் மழை இல்லை. ஆனால் குளிர்ந்த காற்று வீசுகிறது. நேற்று முன்தினத்தை விட அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுகிறது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் மட்டும் இரவு முழுவதும் அதாவது 24 மணி நேரமும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களிலும் அதிகமானோர் வந்து குளித்து மகிழ்கிறார்கள். பகல் நேரத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் இரவு நேரத்தில் நன்றாக குளிக்கலாம் என்று சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ஆனால் இரவிலும் அதிகமானோர் குளித்து செல்கிறார்கள்.

முன்புபோல பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் இரவில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று இரவு குற்றாலம் மெயின் அருவி பெண்கள் குளிக்கும் பகுதியில் மின்விளக்கு எரியவில்லை. ஆனால் ஆண்கள் குளிக்கும் பகுதியில் உள்ள வெளிச்சத்தினால் பெண்கள் குளித்து சென்றனர்


Next Story