பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி கூட்டம்
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.
தேனி
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி கூட்டரங்கில், பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஆளவந்தார் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள், தங்களது வார்டுகளில் போதிய அடிப்படை வசதிகள், கழிவுநீர் வாய்க்கால், மின்விளக்குகள், சாலை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதிலளித்து பேசிய பேரூராட்சி தலைவர், கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார். இந்த கூட்டத்தில் பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனிமுருகன் உள்பட கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story