மழைநீர் கடைகளுக்குள் புகுந்துவிடுவதாக வியாபாரிகள் புகார்


மழைநீர் கடைகளுக்குள் புகுந்துவிடுவதாக வியாபாரிகள் புகார்
x

மழைநீர் கடைகளுக்குள் புகுந்துவிடுவதாக வியாபாரிகள் புகார் அளித்ததை தொடர்ந்து எம்.எல்.ஏ., மேயர் ஆய்வு செய்தனர்.

வேலூர்

வேலூர் சைதாப்பேட்டை மெயின் பஜார், பி.எஸ்.எஸ். கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் போது மழைநீர் கடைகளுக்குள் புகுந்துவிடுகிறது.

இதனால் வியாபாரிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் இன்று அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு உடைந்திருந்த குடிநீர் குழாய் பணிகளை விரைந்து சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் தேவைப்படும் இடங்களில் மழைநீர் தேங்காமல் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கவும் அறிவுறுத்தினர்.

அப்போது வியாபாரிகள் கூறுகையில், 'பல இடங்களில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாய் தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

ஆய்வின் போது 2-வது மண்டல குழு தலைவர் நரேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story