திருப்பூர்-பல்லடம் சாலையில் போக்குவரத்து நெரிசல்


திருப்பூர்-பல்லடம் சாலையில் போக்குவரத்து நெரிசல்
x
திருப்பூர்


திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தினந்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள், குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் அதிகமாக இருக்கின்றன.

கோவை மற்றும் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதால் சரக்கு போக்குவரத்து பிரதானமாக இருப்பதாலும் இந்த சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகின்றன. இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக திருப்பூர் வீரபாண்டி பிரிவு முதல் டி.கே.டி.மில் வரை அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்படுகிறது.. மேலும் பல்லடம் சாலை வழியாக தினந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வரும்.ஆம்புலன்ஸ் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

இது குறித்து வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கூறியதாவது:-

மேம்பாலம்

வீரபாண்டி பிரிவு, நொச்சிதிருப்பூர்-பல்லடம் சாலையில் போக்குவரத்து நெரிசல்ப்பாளையம் பிரிவு, டி.கே.டி.மில் பிரிவு என முக்கிய சாலைகள் செல்லும் சந்திப்புகள் இந்த சாலையில் உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கட்டுக்கடங்காத வாகன நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன. நொச்சிப்பாளையம் பிரிவு மற்றும் டி.கே.டி.மில் பிரிவு, இந்த இரண்டு நால்ரோடுகளிலும் பெரும்பாலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இருப்பதில்லை. இந்த இரண்டு பகுதிகளிலும் நான்கு பக்கங்களிலிருந்து வரும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.

எனவே போக்குவரத்து போலீசாரை நியமித்து ஒழுங்குபடுத்த வேண்டும் அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story