மீன்வள கல்லூரியில் பயிற்சி முகாம்


மீன்வள கல்லூரியில் பயிற்சி முகாம்
x

மீன்வள கல்லூரியில் பயிற்சி முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் ஓடியம்புலத்தில் உள்ள மீன்வள கல்லூரியில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு மற்றும் மரபணு ரீதியாக மேம்படுத்தப்பட்ட திலோப்பியா மீன் குறித்த தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மீன்வளத்துறை தலைவர் ஜாக்லின் பெரோரா தலைமை தாங்கினார். மீன்வள கல்லூரி முதல்வர் பாலசுந்தரி முன்னிலை வகித்தார். முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார் வரவேற்றார். இதில் உதவி பேராசிரியர்கள் மேனகா, அபிஅபிஷேக், முகமது பைசல்லா ஆகியோர் மீன் வளர்ப்பு குறித்த தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். இதில் உதவி வேளாண் அலுவலர்கள் ரவிச்சந்திரன், நான்சி, கலைவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story