திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நெல்லையுடன் நிறுத்தம்


திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நெல்லையுடன் நிறுத்தம்
x

திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நெல்லையுடன் நிறுத்தம் செய்யப்படுகிறது

மதுரை


மதுரை கோட்ட ரெயில்வே மற்றும் திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் இரட்டை அகலப்பாதையை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும் இன்று (வியாழக்கிழமை), நாளை மற்றும் அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை, 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நெல்லை-திருவனந்தபுரம் இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் திருச்சியில் இருந்து நெல்லை வரையிலும், நெல்லையில் இருந்து திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். அத்துடன், நாளை (வெள்ளிக்கிழமை) மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16729) மற்றும் வருகிற 28-ந் தேதி புனலூரில் இருந்து மதுரை வரும் ரெயில் (வ.எண்.16730) ஆகியவை நெல்லை-புனலூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலை, நெல்லையில் இருந்து தென்காசி, செங்கோட்டை வழியாக புனலூர் வரை இயக்க வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story