வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருடிய 2 பேர் கைது


வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருடிய 2 பேர் கைது
x

திருமருகல் அருகே வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 56).இவர் கடந்த 7-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் காரைக்கால் சென்றுள்ளார். பின்னர் அவர் மறுநாள் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் திருக்கண்ணபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் காரைக்கால் மாவட்டம் மதகடி தாமஸ்பிள்ளை அறிவுதிடல் பகுதியை சேர்ந்த தங்கவேலு மகன் அய்யப்பன் (36), மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே அனந்தமங்கலம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் அருள்குமார் (21) ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் 2 பேரும் ராஜாங்கம் வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை திடியதை ஒப்புக்கொண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 1 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story