கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்


கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
x

மேல்வெங்கடாபுரத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

சோளிங்கர் அடுத்த மேல்வெங்கடாபுரம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மருத்துவர் சத்யா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பாபு என்கிற ஜெகதீசன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், குடற்புழு நீக்க மருந்து வழங்குதல், மலட்டுத்தனைமை நீக்குவதற்கான சிகிச்சை அளித்தல், சினை ஊசி போடுதல், உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 250-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தனியார் வேளாண்மை கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்களுக்கு கால்நடை பராமரிப்பது குறித்து விளக்கமளித்தனர். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மஞ்சுநாதன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கால்நடை துறை பணியாளர்கள் ஆதிபராசக்தி வேளாண்மை, கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story