விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டு


விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டு
x

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

இந்த நிலையில் , விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பழனியில் பல்வேறு அமைப்புகளால் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை ஒரே நாளில் கரைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், சட்டம் ஒழுங்கு ஏற்படாத வகையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தி கொள்ளலாம் எனவும் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


Next Story