பேரணாம்பட்டில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்


பேரணாம்பட்டில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
x

பேரணாம்பட்டில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை சப்-கலெக்டர் வெங்க்ஙராமன் தொடங்கி வைத்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா கார்க்கூர் கொத்த மாரிக்குப்பம் கிராமத்தில் உள்ள பாலாறு வேளாண்மை கல்லூரியில் வருவாய்த்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் ஊர்வலம் நடந்தது.

கருத்தரங்கிற்கு சப்-கலெக்டர் வெங்கட்ராமன் தலைமை தாங்கி பேசுகையில், 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர்களாக சேர்ப்பது, இணைய தள வழியாக எவ்வாறு சேர்ப்பது, பொதுமக்களிடம் சென்று புதிய வாக்காளர்களை சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

பின்னர் அவர் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் (தேர்தல்) வாசுகி, பாலாறு வேளாண்மை கல்லூரி முதல்வர் அரிபிரசாத், வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி, கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார், மேலாளர் மதுசூதனன், மக்கள் தொடர்பு அலுவலர் பிரபு, மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story