வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி


வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சங்கராபுரம் தாலுகா அலுவலகம் மற்றும் சங்கராபுரம் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு சங்கராபுரம் தாசில்தார் சரவணன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் வசந்தகுமாரி லிங்கநாதன், துணை தாசில்தார்கள் பசுபதி, சேகர், நுகர்வோர் சங்க தலைவர் மணி, சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா ஆகியோர் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து பேசினர். தொடர்ந்து வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் நுகர்வோா் பாதுகாப்பு சங்க பொருளாளர் சம்பத், அமைப்பு செயலாளர் பழனிவேல், பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் சீதாபதி, சிறப்பு தலைவர் தணிகாசலம், வருவாய் ஆய்வாளர் அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆனந்தன், சிவக்குமார், இதயத்துல்லா அந்தோணி தாஸ், வட்ட வழங்கல் அலுவலர் ராஜா, தலைமை ஆசிரியர் (பொறுப்பு) செல்லப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story