மின்வாரிய தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


மின்வாரிய தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x

மின்வாரிய தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்

திருநெல்வேலி

மின்சார வாரியத்தில் தமிழகம் முழுவதும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஊதிய உயர்வை முழுமையாக வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு பணப்பலன்களை வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். மின்வாரியத்தை தனியார் மயமாக்க கூடாது. புதிய துணை மின் நிலையங்களுக்கான உரிய பதவிகளை அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நெல்லை மகாராஜா நகரில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. நிர்வாகி கந்தசாமி தலைமை தாங்கி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இந்த கோரிக்கைகளை விளக்கி பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளான கண்ணன், தென்கரைமகராஜன், கருப்பசாமி, சிவகுமார், முத்துக்குமார் பீர்முகமதுஷா, கார்த்திகேயன், அர்ச்சுனன், முத்தையா, வண்ணமுத்து, சண்முகசுந்தர்ராஜ், முருகன், இசக்கி பாண்டி, பழனிக்குமார், செல்லதுரை அக்கினிராஜ் ஆகியோர் பேசினார்கள்.

இந்த போராட்டத்தில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story