குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு எந்த மதச்சாயத்தையும் நாங்கள் பூசவில்லை- பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டி


குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு எந்த மதச்சாயத்தையும் நாங்கள் பூசவில்லை- பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டி
x

குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு எந்த மதச்சாயத்தையும் நாங்கள் பூசவில்லை எனவும் பா.ஜ.க. எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல என அண்ணாமலை கூறினார்.

கோவை,

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல. எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்க கூடாது. கோவை மாநகர காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

கோவையில் வேறு எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல், தங்கள் உயிரைப் பணயம் வைத்து துணிவாக செயல்பட்டு காக்கும் கடவுளாக காவல்துறை நண்பர்கள் செயல்பட்டுள்ளனர்; அவர்களுக்கு நன்றி

மாநில அரசு நன்றாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே நான் கருத்துக்களை சொல்கிறேன். தொந்தரவு செய்வதற்காக அல்ல.

ஐஎஸ்ஐஎஸ் தவறானவர்கள் என இஸ்லாம் மத குருமார்களே சொல்கிறார்கள். இஸ்லாமிய மதகுருமார்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அவர்கள் நேரம் தருவதாக சொல்லியிருக்கிறார்கள்.

முன்கூட்டியே மத்திய உளவுத்துறை எச்சரித்தும், தவறுகள் நடந்துள்ளது.தவறுகளை திருத்தி கொள்ள வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று மதத்தை வைத்து சதிகாரர்கள், பிளவுபடுத்த முயற்சித்தாலும் கூட கோவை மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்.

குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு எந்த மதச்சாயத்தையும் நாங்கள் பூசவில்லை.

கோவில் பக்கத்தில் கார் வெடித்த இடத்தில் கோலிக்குண்டு, ஆணி போன்றவை கிடைத்துள்ளது என அங்கிருந்தவர் என்னிடம் கொடுத்தார்கள். இதை செய்தவர்கள் நிச்சயமாக சாதாரணமாக செய்யவில்லை. (அதனை பாக்கெட்டில் இருந்து அவற்றை எடுத்து காட்டினார்) உயிர்சேதம் ஏற்படுத்த வேண்டும் என்று செய்து இருக்கின்றனர் எனகூறிய அவர், இந்த வழக்கு விசாரணையில் சில தவறுகள் நடந்து இருக்கின்றது. எதற்காக இதை சரி செய்த கூடாது என்பதற்காக கேள்விகள் எழும்பபடுகின்றது எனவும் தெரிவித்தார்.


Next Story