பாஜக கூட்டணியில் தான் நீடிக்கிறோம் - ஓ.பன்னீர் செல்வம் பேட்டி


பாஜக கூட்டணியில் தான் நீடிக்கிறோம் - ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
x

பாஜக கூட்டணியில் தான் நீடிக்கிறோம் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில்,

பாஜக கூட்டணியிலேயே தொடர்ந்து நீடித்து வருகிறோம். கூட்டணியை பாஜக முறித்துக்கொள்ளும் வரை அந்த கூட்டணியில் தொடர்வோம்.தேனி எம்.பி. ரவீந்திரநாத் விவகாரத்தில் நிச்சயம் சுப்ரீம்கோர்ட்டை நாடுவோம்.

மணிப்பூரில் நிரந்தர அமைதி ஏற்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும்.மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்கள் கொடூரமான முறையில் நடத்தப்பட்டுள்ளனர். இதுபோன்று நடைபெறாமல் தடுப்பது அந்த மாநிலம் மற்றும் இந்திய அரசின் கடமை என தெரிவித்தார்.


Next Story