எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தா.பழூர்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு, மீண்டும் சென்னை திரும்பும் வழியில் அரியலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி வரும் தகவலறிந்த அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை.ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட அவைத்தலைவர் ராம ஜெயலிங்கம், மாவட்ட இணை செயலாளர் தங்கமுத்து உள்ளிட்டோர் அடங்கிய அ.தி.மு.க.வினர் அரியலூர், தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் மதனத்தூர் போலீஸ் சோதனைச் சாவடி அருகில் அவருக்கு மலர்கொத்து, சால்வை வழங்கி வரவேற்பு அளித்தனர்.
இதேபோல் ஜெயங்கொண்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். ஜெயங்கொண்டம் 4 ரோடு பகுதியில் நன்னிலத்தில் இருந்து வந்த அவருக்கு, அ.தி.மு.க. நகர செயலாளர் டி.ஆர்.செல்வராஜ் பட்டாசு வெடித்து சால்வை அணிவித்து, மலர் கொத்து கொடுத்து மாவட்ட செயலாளர் மற்றும் மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் அறிவு என்கின்ற சிவசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் கல்யாணசுந்தரம், மருதமுத்து மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இதனை அடுத்து அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.