மரத்தில் மொபட் மோதி தொழிலாளி பலி
சாத்தான்குளம் அருகே மரத்தில் மொபட் மோதி தொழிலாளி பலியானார்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே மரத்தில் மொபட் மோதி தொழிலாளி பலியானார்.
தொழிலாளி
சாத்தான்குளம் அருகே உள்ள கீழப்புளியங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சவுந்தர்ராஜ் (வயது 65). கூலி தொழிலாளி. இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும், 4 மகன்கள், 6 மகள்கள் உள்ளனர். சவுந்தர்ராஜ் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பேய்க்குளம் சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு தனது மொபட்டில் சென்றார். பின்னர் இரவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
பலி
சாத்தான்குளம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மொபட் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சவுந்தர்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து அவரது மகன் நயினார், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.